முஸ்லிம் பெண்கள் எப்படி வாழ வேண்டும்?

இஷான இக்பால்
இன்றை சமூகம் சீர்கெட்ட நிலையில் இருப்பதற்கு பெண்களே ஒரு முக்கிய காரணம் எனலாம். அன்றைக்கு இருந்த ஒழுக்கநெறிகள் இன்றை பெரும் பான்மையான பெண்களிடம் காணமுடியாது.
சமூகத்தின் உயிர் நாடியாக இருக்க வேண்டிய இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை மறந்து மாற்று மத கலாச்சாரத்தை தேடிப்பிடித்து தங்கள் வாழ்கையில் கடைப்பிடிக்கிறார்கள்.
அன்றைக்கு ஒழுக்கத்துக்கு உத்தரவாதம் இல்லாத மடமை நிறைந்த ஒரு சமூகம் அச்சமூகத்தில் நல்லவரை தேடிப்பிடிப்பது கடினம். தீமை செய்யாதவர் அச்சமூகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
தினமும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்த அவர்களை அல்குர்ஆனின் வசனங்கள் மனம் மாற்றியது.
ஒரு நாள் ஜுஹைனா என்ற குலத்தை சேர்ந்த ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தான் ஒழுக்கமற்ற ஒரு காரியத்தில் ஈடுபட்டு விட்டதாக தயங்காமல் சொன்னார்கள்...
இதோ அந்த செய்தி
அல்லாஹ்வின் தூதரே நான் விபச்சாரம் செய்துவிட்டேன் எனக்கு தண்டனை வழங்குங்கள் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் சென்று உன் வயிற்றில் வளரும் குழந்தையை பெற்றடுத்துவிட்டு வா என்றார்கள். பெற்றெடுத்த பின்பும் அந்த பெண் வந்தால். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் குழந்தை பால் குடி மறக்கும் வரை வளர்த்து விட்டு வா என்றார்கள். வளர்த்து விட்டு மீண்டும் வந்து எனக்கு விபச்சாரக்குற்றத்துக்கு மரணதண்டனை வழங்கும் படி வேண்டினார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதர் அந்த பெண்ணுக்கு விபச்சாரம் செய்த குற்றத்துக்காக கல்லெரி தண்டனை வழங்கினார்கள். .(சுருக்கம்)(முஸ்லிம்)
அன்றை முஸ்லிம் பெண்கள் தான் அறியாமல் செய்த பாவத்தை உணர்ந்து அது அல்லாஹ்விடம் பெரும் குற்றம் என்பதை புரிந்து அல்லாஹ்வை பயந்து பரிகாரம் தேடிக்;கொண்டார்கள்.
ஆனால் இன்றை இஸ்லாமிய பெண்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பெண்களை எப்படி முஸ்லிம் பெண்கள் என்று அழைப்பது? என்று கேட்கக் தோன்றுகின்றது.
பாவத்தை கணக்கிட்டு சொல்முடியாத அளவுக்கு எதை செய்தாலும் பாவமான செயலையே தெரிவு செய்கின்றார்கள். இப்படி வாழ்கின்ற இன்றை பெண்களை ஜாஹிலியப்பெண்கள் என்று சொல்ல முடியாதா? அறியாமைக்கும், மடமைக்கும் இலங்கை முஸ்லிம் பெண்களை உதாரணமாக சொல்லமுடியாதா? இதை புண்படுத்துவதற்காக கேட்கவில்லை பெண்கள் சிந்திப்பதற்காக கேட்கின்றேன்.
அதே போல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று தி;ட்டம் தீட்டுகின்றார்கள் ஆனால் எப்படி வளர்கின்றார்கள் என்பதில் கவணக்குறைவு.
அதனால் சீர்கெட்ட மாணவிகள் அதிகம் வழி தவரிய சதோரிகள் குறைவில்லை.
முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய நாடுகளில் ஒன்று தான் இந்தோனேசியா. இந்தோனேசியா என்ற பெயரைக்கேட்டாலே நம்முடைய சமூகத்துப்பெண்கள் சொல்வது என்ன? 'அது முஸ்லிம் என்ற பெயரில் .இருக்கும் ஒரு நாடு அதில் தான் பாவங்கள் அதிகமாக நடக்கிறது' என்று சொல்வதை நாம் கேட்கின்றோம். அந்த நாடு இஸ்லாமிய பண்பாடு இல்லாமல் போய்விட்டது என்று கவளைப்படும் நம் பெண் சமூகம் இஸ்லாத்தை மறந்து வாழ்வதால் என்னுடை மகளும் அந்த கேடுகெட்ட வாழ்க்கையை சந்திக்க காத்திருக்கிறாள் என்பதை கவனிக்க மறந்து விடுகின்றார்கள்.
ஒழுக்கத்தைப்பற்றி சிந்தித்துப்பார்க்க மர்யம்(அலை) அவர்களை குறித்து சொல்கின்றான்.
' இன்னும் (விசுhவசிகளுக்கு உதாரணமாக கூறுகின்றான் ) அவள் தன்னுடைய கற்பை பாதுகாத்துக்கொண்டால். அல்குர்ஆன் (66:12)
கற்பை பாதுகாப்பது இலகுவான விஷயம் இல்லை என்பதையும் ஒழுக்கமற்ற பெண்கள் நிறைந்த காலத்தில் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார் என்பதையும் இந்த வசனத்தில் .இருந்து புரிந்து கொள்ள முடியும்.
இலகுவாக ஒழுக்கத்தை கடைப்பிக்கக்கூடிய காலத்தில் மர்யம் (அலை) அவர்கள் ஒழுக்கமாக வாழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் பெரிய ஆதாரமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அல்லாஹ் எடுத்துக்காட்டாக சொல்வதை வைத்தே தீர்மனித்துவிடலாம். ஒழுக்கமற்ற ஒரு சமூகத்தில் தான் அவர்கள் ஒழுக்கத்தை பேனியுள்ளார்கள் என்பது தெளிவு.
கற்பை பாதுகாத்து வாழ்ந்த மர்யம் (அலை) அவர்களுக்கும் இன்றை பெண்களுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள். இன்று செருப்பு அணிவதிலிருந்து தலை சீவுவது வரைக்கும எல்லாவற்றிலும் ஒழுக்கமற்ற செயல்தான் இவை ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்வது அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன் ஏனெனில் நிதர்சனமாக அதை நாங்கள் தினமும் காண்கின்றோம்.ஒழுக்கமற்ற காலத்தில் வாழ்ந்த அன்னை மர்யமுடைய ஒழுக்கம் எங்கே? இன்றை முஸ்லிம் பெண்களின் ஒழுக்கம் எங்கே?
இந்த மர்யம் எப்படி கற்பை பாதுகாத்தாலோ அதே போல் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிம் பெண்களுக்கும் கடமையாகும்.
கற்பையும் ,ஒழுக்கத்தையும் பாதுகாப்பது இந்த காலத்துக்கு சாத்தியப்படுமா? அது எவ்வளவு கடினமான காரியம் ?என்று கேட்கிற பெண்களையும் பார்க்கின்றோம் ஒழுக்கமாக வாழ்வது என்பது கடினமான காரியம் தான் அதிலும் இந்தக்காலத்தில் அது மிகவும் கடினமான விஷயம் என்றாலும் அதை செயல் படுத்திட பல வழிகள் தேவையில்லை இலகுவாக நாம் செல்லும் பாதையில் சரியாக இருந்தாலே போதும். ஒழுக்கமாக வாழலாம்.
சுவர்க்கம் செல்வதற்கு என்று ஒரு வழி ஒழுக்கமாக வாழ வேறு வழி என்று இரு வழிகளால் போகவேண்டிய அவசியம் இல்லை இரண்டுக்கும் ஒரே வழிதான் அதுதான் இஸ்லாத்தை முஸ்லிம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழியாகும்.
முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை பின்பற்றினாலே போதும் கற்பு பாதுகாக்கப்பட்டு விடும் என்பது நம் பெண்களுக்கு ஏனோ தெரியவில்லை?.
எப்படிப்பட்ட நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்துடன் வாழ்ந்தாலே போது ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்து விடலாம்.
நீங்கள் எதிர்பார்க்கும் உலக வாழ்க்கையை விட மறுமையை விரும்பிய ஒரு பெண்மணி அவள் இந்த உம்மத்தின் கண்மணி என்றளவுக்கு அல்குர்ஆன் சொல்லும் சில வார்த்தைகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடும். அந்த அம்மாவை அல்லாஹ் நல்ல பெண்களுக்கு உதாரணமாக அல்குர்ஆனில் 66:11 வசனத்தில் தெளிவு படுத்துகின்றான்.
நம்பிக்கை கொண்டவர்களுக்கு பிர்அவ்னுடை மனைவியை உதாரணமாக கூறுகின்றான். என் இரட்சகனே சுவனத்தில் உன்னிடத்தில் எனக்கு ஒரு வீடு கட்டுவாயாக! ஃபிர்அவ்னை வி;ட்டும் அவனுடை செயலை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக அன்றியும் அநியாய காரர்களான கூட்டத்தாரை விட்டும் நீ என்னை காப்பாற்றுவாயாக! என்று பிராத்தணை செய்து அவர் கூறியதை நினைவு கூர்விராக!
எப்படிப்பட்ட கஷ்டங்ள் வந்தாலும் மார்க்கத்தையும் ,தன்னுடைய கொள்கையையும் விட்டுக்கொடுக்காமல் வாழவேண்டும் என்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை விட என் கணவன் (பிர்அவ்ன்)சொல்லக்கூடிய கலாச்சாரம் தவரு என்றும் உருதியாக இருந்த அந்த வீர பெண் பற்றிய செய்தியை அல்லாஹ் அழகாக சொல்கின்றான்.
ஆனால் நம்முடைய முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் இஸ்லாத்தை வெறுத்து பிப்ரவரி 14யில் காதலர் தினம் என்ற ஓர்நாளில் காபீர்கள் கடைப்பிடிக்கும் கொள்கையை பின்பற்ற போவதை பார்த்து இந்த சமூகமே வெட்கப்படுகின்றது.
இஸ்லாத்தை கண்டுகொள்ளாமல் கருப்பு ஹிஜாப் அணிந்து கடக்கரையில் காளை வைத்து காதலில் காமக்காதலனை தேடித்திரிகின்றார்கள். நம் இஸ்லாமிய பெண்கள்
பாருங்களேன் கடக்கரையில் காதலனுடன் சென்று காத்து வாங்குகின்றார்கள். 'உடனே ஏன் காத்துவாங்வது தப்பா? என்று கேட்டு விடுவார்கள். பெண்களே! காத்து வாங்குவது தவறில்லை காமக்காதலனுடன் சென்று காத்துவாங்குவது தான் தப்பு. இதைபற்றி இஸ்லாமிய பேச்சாளர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் சொல்லி சொல்லி எழுதி எழுதி அலுத்துப்போய் விட்டார்கள்.
பெண்களே!! உணர்ந்து கொள்ளவேண்டும் நாம் இருப்பது ஒழுக்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் நல்ல முஸ்லிம் பெண்ணாக அற்ப உலகில் வாழ்ந்து இறையடி சேரவேண்டும் என்ற நிலைப்பாட்டை கையில் எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஒழுக்கமற்ற பெண்களினுடைய நரகப்படுகுழி உங்களுக்கு கிடைத்து விடும் அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்...



.jpg)
.jpg)
